Facebook Page

6ம் வகுப்பு தமிழ் : கனவு பலித்தது வினா - விடைகள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்ற அறிவியல் உண்மையையும், உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் கூறியவர் யார்?
தொல்காப்பியர்.

கடல் நீர் ஆவியாகி மேகமாகும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் எவை?
முல்லைப்பாட்டு 
பரிபாடல் 
திருக்குறள்
கார் நாற்பது
திருப்பாவை

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி  - முல்லைப்பாட்டு.

கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - கார் நாற்பது.


திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது
என்ற அறிவியல் கருத்தைக் கூறும் ஔவையார் பாடல் எது?

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி


போர்க்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற
ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்ற நூல் எது?
பதிற்றுப்பத்து

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.


சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை,
நரம்பினால் தைத்த செய்தி இடம்பெற்ற நூல் எது? நற்றிணை

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்

தொலைவில் உள்ள பொருளின்
உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கலிலியோவின் கருத்து இடம்பெற்றுள்ள நூல் எது?
திருவள்ளுவமாலை

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - கபிலர்


தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
  • முன்னாள் குடியரசுத் தலைவர் - அப்துல் கலாம்
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் -  டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
  • இஸ்ரோ முன்னாள் தலைவர் கை.சிவன்
Print Friendly and PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்