பொதுவாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.
காரணம் : உணவு, இருப்பிடம், தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் இனப்பெருக்கம்.
அடிப்படை: நிலவு, விண்மீன் மற்றும் புவியீர்ப்பு புலம்
வலசையின் போது ஏற்படும் மாற்றங்கள்
தலையில் சிறகு வளர்தல்
இறகுகளின் நிறம் மாறுதல்
உடலில் கற்றையாக முடி வளர்தல்
சிறப்பு குறிப்புகள்
ஏறத்தாழ, 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சக்திமுத்தப்புலவர் எழுதிய "நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலில் உள்ள "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
ஐரோப்பாவில் இருந்து செங்கால் நாரைகள் தமிழகம் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிட்டுக்குருவி பற்றிய குறிப்புகள்:
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம்
ஆண் குருவியின் தொண்டை பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும். உடல் பகுதி அடர் பழுப்பாக இருக்கும்.
பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கூடுகட்டி வாழும்; கூடு கட்டும் காலங்களில் சப்தமிடும்.
கூடு கட்டிய பின் 3-6 முட்டைகள் வரை இடும்.
14 நாட்கள் அடைகாக்கும். 15ம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள் ஆகும்.
இமயமலைத் தொடரின் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் : மார்ச் - 20
பறவை மனிதன்:
இந்தியாவின் பறவை மனிதர் : டாக்டர் சலீம் அலி
இவர் தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு இட்ட பெயர் : சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
தெரிந்து கொள்வோம்
சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை கப்பல் பறவை. இது தரை இறங்காமல் 400 கிலோமீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா கடற்கொள்ளை பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
உலகிலேயே நெடுந்தலைவு 22 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும் பறவையினம் - ஆர்டிக் ஆலா
0 கருத்துகள்