சிலப்பதிகாரம்
சொல்லும் பொருளும் :
திங்கள் - நிலவு
கொங்கு - மகரந்தம்
அலர் - மலர்தல்
பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
மேரு - இமயமலை
நாமநீர் - அச்சம் தரும் கடல்
அளி - கருணை
சிறுவினா
1) சோழ மன்னன் அணியும் மாலை எது?
ஆத்திமலர் மாலை
2) சோழ நாட்டில் பாய்ந்து வளம் செய்யும் ஆறு எது?
காவிரி
3) தமிழ்நாடு என்ற சொல் முதலில் இடம்பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம், வஞ்சி காண்டம்
4) சிலப்பதிகாரம் இயற்கை வாழ்த்து பகுதியில் இடம்பெற்றவற்றை வரிசைப்படுத்துக
- திங்கள்
- ஞாயிறு
- மழை
நூல் குறிப்பு
இயற்றியவர் : இளங்கோவடிகள்
காலம் : கி.பி இரண்டாம் நூற்றாண்டு
மரபு : சேர மரபு
சிறப்பு பெயர்கள் :
- முதல் காப்பியம்,
- முத்தமிழ் காப்பியம்,
- குடிமக்கள் காப்பியம்.



0 கருத்துகள்