வளர்தமிழ்
நாம் சிந்திக்கவும், சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது எது?
மொழி
உலகில் உள்ள மொழிகள் எத்தனை ?
ஆறாயிரத்திற்கு மேற்பட்ட
தமிழ் மொழியின் இனிமைக் குறித்து பல மொழி கற்ற பாரதியார் பாடிய பாடல் என்ன?
"யாமறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" - பாரதியார்
பாரதத் தாயின் தொன்மை குறித்து பாரதியார் கூறிய கருத்து என்ன?
"என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!" - பாரதியார்
தமிழில் நமக்கு கிடைத்த நூல்களில் மிகப் பழமையான இலக்கண நூல் எது?
தொல்காப்பியம்
தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எவ்வாறான எழுத்துக்களாக அமைந்துள்ளன?
வலஞ்சுழி எழுத்துக்களாக
"தமிழ்" என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
தொல்காப்பியம்
"தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" - தொல் : 386
"தமிழ்நாடு" என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
சிலப்பதிகாரம்
"இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்" - சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம்
"தமிழன்" என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
அப்பர் தேவாரம்
"_______ தமிழன் கண்டாய்" - திருத்தாண்டகம் : 23
ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல் எது?
சீர்மை
தமிழில் உள்ள இலக்கண நூல்களில் இரண்டு கூறு?
தொல்காப்பியம், நன்னூல்
தமிழில் உள்ள காப்பிய நூல்களில் இரண்டு கூறு?
சிலப்பதிகாரம், மணிமேகலை
தமிழில் உள்ள அற நூல்களில் இரண்டு கூறு?
திருக்குறள், நாலடியார்
சங்க இலக்கிய நூல்கள் எவை?
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
மலரின் ஏழு பருவங்கள் எவை?
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
'மா' - என்னும் ஒரு சொல் குறிக்கும் பல பொருள்கள் எவை?
மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
தமிழ் மொழியின் பிரிவுகள் எத்தனை?
3 (இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்)
முத்தமிழில் எண்ணத்தை வெளிப்படுத்த உதவுவது எது?
இயல் தமிழ்
முத்தமிழில் உள்ளத்தை மகிழ்விப்பது எது?
இசைத்தமிழ்
முத்தமிழில் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுவது எது?
நாடகத்தமிழ்
தமிழில் உள்ள கவிதை வடிவங்கள் எவை?
துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
தமிழில் உள்ள உரைநடை வடிவங்கள் எவை?
கட்டுரை, புதினம், சிறுகதை
மொழியை கணினியில் பயன்படுத்தி அது எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?
எண்கள்


0 கருத்துகள்