Facebook Page

6ம் வகுப்பு தமிழ் : தமிழ்க்கும்மி வினா - விடைகள்

தமிழ்க்கும்மி


சொல்லும் பொருளும் :
ஆடிப்பெருக்கு - கடல் கோள்
மேதினி - உலகம்
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
உள்ளப்பூட்டு - உள்ளத்தின் அறியாமை
அசதி - சோர்வு

பிரித்தெழுதுக :
செந்தமிழ் - செம்மை + தமிழ்
பொய்யகற்றும் - பொய் + அகற்றும்

சேர்த்தெழுதுக :
பாட்டு + இருக்கும் - பாட்டிருக்கும்
எட்டு + திசை - எட்டுத்திசை

மோனை சொற்கள் :
ஊழி - ஊற்றெனும்

எதுகை சொற்கள் :
ஆழி - ஊழி
பொய் - மெய்
காெட்டுங்கடி – எட்டுத்திசை
கண்டதுவாம் – கொண்டதுவாம்
பூட்டறுக்கும் – பாட்டிருக்கும்

ஒரு மதிப்பெண் வினா - விடை
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தமிழ்க்கும்மி பாடலின் ஆசிரியர் யார்?
பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
துரை மாணிக்கம்

பெருஞ்சித்திரனாருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
பாவலரேறு

தனித்தமிழையும், தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் எவை?
தென்மொழி
தமிழ்ச்சிட்டு
தமிழ் நிலம்

பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?
கனிச்சாறு
கொய்யாக்கனி
பாவிய கொத்து
நூறாசிரியம்

பாடநூலில் உள்ள தமிழ்க்கும்மி பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கனிச்சாறு

தமிழுணர்வு நிறைந்த பாடல்களை கொண்ட கனிச்சாறு என்னும் நூலானது எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
எட்டுத் தொகுதிகளாக

Print Friendly and PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்