கணியனின் நண்பன்
முக்கிய குறிப்புகள்
- "ரோபோ" (Robot) என்னும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்? காரல் கபெக் (Karel capek)
- காரல் கபெக் (Karel capek) தனது நாடகத்தில் முதல் முதலாக "ரோபோ" (Robot) என்னும் சொல்லைப் பயன்படுத்திய ஆண்டு எது? 1920
- காரல் கபெக் (Karel capek) எந்த நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர்? செக்
- "ரோபோ" என்ற சொல்லின் பொருள் என்ன? அடிமை
- உலகிலேயே முதன்முதலாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு எது? சவுதி அரேபியா
- உலகிலேயே முதன் முதலாக ஒரு நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ள ரோபோவின் பெயர் என்ன? சோபியா
- ஐக்கிய நாடுகள் சபையானது சோபியாவுக்கு எந்தப் பட்டத்தை வழங்கி உள்ளது? புதுமைகளின் வெற்றியாளர்.
உயிர் இல்லாத ஒரு பொருளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பட்டம் வழங்குவது இதுதான் முதல் முறை.
- 1997-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்க போட்டியில் உலக சதுரங்க வெற்றியாளரான கேரி கேஸ்புரோவை வென்ற மீத்திறன் கணினியின் பெயர் என்ன? டீப் புளூ (Deep Blue)
- டீப் புளூ (Deep Blue) என்னும் மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது? IBM
தெரிந்து கொள்வோம்
மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் இயந்திரம் தானியங்கி ஆகும். "இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்" என்று பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது
மாதிரி வினாக்கள்
கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்துவதன் மூலம் மாதிரி வினாக்களை எழுதி பார்க்கலாம்.



0 கருத்துகள்